ரோகித், சிராஜ் வேகம்! வெஸ்ட் இண்டீஸ் சோகம்!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணீகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 438 ரன்கள் குவித்திருந்தது. முக்கியாமாக இது விராட் கோலியின் 500 வது சர்வதேசப் போட்டியாகும். அதனை சிறப்பிக்கும் விதமாக கோலி சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியாந்து முதலில் நிதானமாகவும்  பின்னர் தடுமாறவும் செய்தது. ஏதுவான பந்துகளை கூட அடிக்காமல் தட்டுப்பாட்டத்திலேயே தீவிரம் காட்டினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். இதனால் அவர்களின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. அதிகடட்சமாக கேப்டன் பிராத்வெயிட் 75 ரன்கள் எடுத்தார். 3-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 108 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. இடையே மழை ஒரு மணி நேரம் பெய்ததால் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. பின்னர் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய டெஸ்ட் இண்டீசை இந்திய வேகப்பந்து வீச்சாளர்முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் பயமுறுத்தினர். ஸ்ட்ம்பை குறி வைத்து தாக்குவதில் சிராஜ் கில்லாடி. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் திணறினர்.

வெறும் 7.4 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தாரை வார்த்தது. 255 ரன்களுக்கு மொத்த அணியும் சுருண்டது. இந்தியா சார்பாக சிராஜ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். அடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும் ஜெஸ்வாலும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது இவரது அதிவேக அரைசதமாகும். 57 ரன்னில் இருக்கும் போது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஜெஸ்வால் 38 ரன்னில் இருக்கும் போது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி இரண்டு விக்கெட்கள் இழந்து 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. மீண்டும் மழை பெய்து ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது.

Exit mobile version