கொடநாடு விவகாரத்தில் திமுகவின் சதித் திட்டங்களை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் பொதுகூட்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், காலத்தால் அழியாத திட்டங்களை கொடுத்தவர் எம்ஜிஆர் என்று புகழாரம் சூட்டினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதை அவர் சுட்டிக் காட்டினார்.
Discussion about this post