பிரபல சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டம் முதல் நிலையை எட்டியுள்ளது.
முதல் நிலையாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்டோரியாகவும், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகவும் பகிர்வதற்கான வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
இந்த வசதியினை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் வசதியுள்ள போன்களில் ஏபிஐ டேட்டாஷேரிங் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது பரிசோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுநாள் வரை நடைமுறையில் இருந்த லிங்க் ஷேரிங்கிற்கு பதிலாக தற்போது Application programming interface என்பதன் மூலமாக ஸ்டேட்டஸை ஷேர் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தற்போது பீட்டா வெர்ஷனில் கிராஸ் போஸ்ட் மூலமாக மூன்றையும் இணைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது அனைத்து வெர்ஷன்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.