மேட்டூரில் அறுவடைக்குத்தயார் நிலையிலுள்ள தர்பூசணி பழத்தால், நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் இவ்வாண்டு சுமார் 100 ஏக்கருக்கும் மேல் தர்பூசணி விவசாயம் செய்துள்ளனர். இந்நிலையில் 3 மாத இடைவேளைக்குப்பிறகு, தர்பூசணிச்செடிகள் தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. மேலும் கோடைகாலம் துவங்கியுள்ளதால், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தர்பூசணி விதைத்த விவசாயிகள், பழ அறுவடையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
Discussion about this post