தேனியில் கோடை மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடங்கி இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 3 மாதங்களுக்குப் பிறகு வைகை அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், மூல வைகையாறு, வராக நதியில் வரும் நீரினால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு 280 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 60 கன அடி நீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது. மேலும் கிணறுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள ஆழ்துளை குழாய்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.