தமிழக எதிர்க்கட்சி தலைவரின் தொகுதியில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில், அவரோ சிங்கப்பூரில் உல்லாசமாக படகு சவாரி செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இதற்கு தொகுதிமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் கொளத்தூரில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. சென்னையின் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்த பற்றாக்குறையை தீர்க்கும் வண்ணம் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர் கால நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளன.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தண்ணீர் பிரச்சினையை வைத்து அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
பொதுவாக, கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் ‘தான் சட்டையில் குருணி அழுக்கு வைச்சிக்கிட்டு, ஊரான் சட்டையில் உள்ள தூசியை குறை சொன்னானாம்’. அது போல், கொளத்தூர் தொகுதியில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் வேளையில், அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் உல்லாசமாக சிங்கப்பூரில் படகு சவாரி செய்கிறார் ஸ்டாலின்.
விளம்பரத்திற்காகவும், போட்டோ எடுப்பதற்காகவும் ஒரு டேங்கர் லாரி தண்ணீரை வைத்து தொகுதி முழுவதும் தண்ணீர் சப்ளை செய்வது போல் திமுகவினர் சுற்றி திரிவது கொளத்தூர் தொகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ யாரென்றே தெரியாது என்று கூறுகின்றனர், அத்தொகுதியில் உள்ள தாய்மார்கள்.
ஆம் அவர்கள் தெரியாது என கூறியது, திமுகவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினைத்தான். இதற்கு ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். கதை இப்படி இருக்க, வெறும் அரசியலுக்காக தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் என்று மேடை போட்டு கூவுகிறார் எதிர்க்கட்சி தலைவர்.
Discussion about this post