திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தண்ணீர் திறந்து வைத்தார்.
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் 94 ஆயிரத்து 068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் இருந்து நான்காம் மண்டலப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார்.
இதேபோல், தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.