இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு

கேரளாவில் கன மழை பெய்து வரும் நிலையில், நாளை வரை மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தென்மேற்குப் பருவ மழை தொடங்கி 40 நாட்கள் ஆன நிலையில், கேரளாவில் பருவமழை தீவிரமாகியுள்ளது. திங்கட்கிழமை வரை கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிகக் கன மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், இதேநிலை நாளை வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

Exit mobile version