மஞ்சளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே 57 அடி கொண்ட மஞ்சளாறு அணை மூலம், சுமார் 5 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. கடந்த ஒரு மாதமாக சீரான இடைவெளியில் பருவமழை பெய்து வந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47 அடி உள்ள நிலையில், நீர் இருப்பு 212 புள்ளி 08 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருப்பதாலும், வடகிழக்கு பருவ மழை தொடங்க விருப்பதாலும் முதல் போக சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.