நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 121 அடியை நெருங்கி வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதையடுத்து கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று, 43-வது முறையாக 120 அடியை எட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 121 அடியை நெருங்கி வருகிறது. காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 120 புள்ளி 70 அடியாக இருந்தது. டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.