வீராணம் ஏரி நிரம்பி வழிவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

வீராணம் ஏரி நிரம்பி வழிவதால், சென்னைக்கு அடுத்த 4 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு 35 சதவீதம் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வீராணத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. தற்போதைய நீர் இருப்பு 47புள்ளி 1 அடியாக உள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 66 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்கு வீராணம் ஏரி நீரை அதிகமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி, இருக்கும் நீரினை சென்னை குடிநீருக்கு பயன்படுத்தினால், 4 மாதங்களை சமாளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நெம்மேலியில் இருந்து கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடி நீராக பயன்படுத்தப்படுவதால், சென்னையில் உடனடியாக குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version