சென்னை வந்தடைந்த ஜோலார்பேட்டை தண்ணீர்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீரை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறைய போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குடிநீரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version