தொடர் மழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் போதிய அளவு கோடை மழை பெய்யவில்லை. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து குறைந்திருந்தது. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கியதையடுத்து தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதியிலும் பரவலாக சாரல் மழை பெய்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு வரை அருவியின் ஒரு பகுதியில் மட்டும் நீர் வரத்து இருந்த நிலையில் சாரல் மழை பெய்ததையடுத்து அருவியின் அனைத்துப் பகுதியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மணிமுத்தாறு மாஞ்சோலை மலைச் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதால் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.

Exit mobile version