சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் விநியோகம் செய்ய தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேட்டூர் குடிநீர் திட்டத்தின் கீழ் சென்னைக்கு ரயில் மூலம் 25 மில்லியன் லிட்டர் குடிநீர் 50 டேங்கர்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. நாள் தோறும் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீரை கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அரசுக்கு ரூபாய் 154 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தண்ணீர் உபரியாக உள்ள பகுதிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.