பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு மட்டுமின்றி மாசி மாத துவக்கத்திலும் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மாசி மாத பூஜைக்காக, நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் வரும் 17ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறுகின்றன. முன்னதாக கோவில் தந்திரி கண்டரு ராஜீவ்ரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காண்பித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாத பூஜைக்கு ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெறாதவர்கள் நிலக்கல், பம்பையில் திறக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுண்டர்களில் சென்று அனுமதி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: KeralaopensabarimalaiTemple
Related Content
கேரளா இனி "கேரளம்" - கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
By
Web team
August 9, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023
ஜூன் 5 முதல் தென் மேற்கு பருவமழை துவக்கம்!
By
Web team
June 2, 2023
வழிபாட்டுத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் எனக் கூறி நூதன மோசடி! பாத்து பக்தர்களே! எச்சரிக்கும் சைபர் க்ரைம்!
By
Web team
April 27, 2023