உட்கட்சிப்பூசல் காரணமாக திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விபி துரைசாமியை நீக்கி அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விபி துரைசாமி அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் 2 முறை துணை சபாநாயகராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், திமுக சார்பில் இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவரது பெயரை திமுக தலைமை அறிவிக்காமல் புறக்கணித்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல் முருகனை நேரில் சந்தித்தார். இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விபி துரைசாமியை நீக்கி அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post