நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் உள்ளிட்ட 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல்
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிகளை பின்பற்றாததால் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து
12,826 பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8-வது வார்டுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை
மீதமுள்ள 12,607 பதவியிடங்களுக்கான தேர்தலில் 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
1,370 மாநகராட்சி பதவியிடங்கள், 3,825 நகராட்சி உறுப்பினர்கள், 7,412 பேரூராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல்
தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
வார்டுகளுக்கு தொடர்பில்லாத வெளியூர் நபர்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் தீவிரம்
வாக்குப்பதிவு எந்திரங்கள், பூத் சிலிப்புகள், மை,கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைப்பு
வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை
Discussion about this post