மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிபு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளில், பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்படும் நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
Discussion about this post