வாக்களிப்பதன் அவசியத்தை மணல் சிற்பம் மூலம் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக முத்துநகர் கடற்கரையில் ஓவியர் வர்மா தனது கைவண்ணத்தால் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரும் இடம் பெறாமல் இருக்கக்கூடாது என்பதையும், மாற்றுதிறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பேரணிகள், விழிப்புணர்வு நாடகங்கள், கலை
நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.