ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க வாக்கு சேகரித்த நிர்வாகிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.

Exit mobile version