விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு தனது காரில் அனுப்பி வைத்த எச்.ராஜா

சிவகங்கை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரை மீட்ட, சிவகங்கை மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் இன்று பிரசாரம் செய்தார். அப்போது, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைக் கண்ட எச்.ராஜா, அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் படுகாயம் அடைந்த மூன்று பேரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version