சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரியில், அரசுடன் இணைந்த தன்னார்வலர்கள், இரண்டு பெரிய மண் திட்டுக்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஏரி குளங்களை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுப்பதில் அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே வேளையில் பறவைகள் வந்து அமர்ந்து ஓய்வெடுக்கவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் , அரசுடன் இணைந்த கொரட்டூர் ஏரி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தன்னார்வலர்கள், சுமார் 7 லட்சம் செலவில் இரண்டு மண் திட்டுக்கள்அமைத்து மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். 5 வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி கழிவு நீர் கலக்காமல் பாதுகாப்பான குடிநீராக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.