காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லக்னோ சென்ற பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரபிரதேச பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி அண்மையில் பொறுப்பேற்றார். இதனையடுத்து தேர்தல் பிரசார பணிகளை துவங்குவதற்காக தனது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியுடன் லக்னோவுக்கு சென்ற பிரியங்கா காந்திக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பேருந்தின் மேற்கூரையில் நின்றவாறு லக்னோவின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்ற ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர்.
Discussion about this post