பேட்ட வேலனை பின்னுக்கு தள்ளிய தூக்குதுரை….

பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அஜீத் – ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மல்லு கட்டி வருகின்றனர். அஜீத் – விஜய் சண்டை எல்லாம் இப்போ முடிந்து, அஜீத் – ரஜினி என்று தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பொதுவாக ரஜினி படங்கள் வரும் போது, மற்ற படங்கள் வலி வராது. அதற்கு ஒரே காரணம் ரஜினியின் வசூல் சாதனை தான்.

அப்படி இருக்கும் போது, ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ் ஆன அதே தினத்தில் அஜீத்தின் விஸ்வாசம் படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. முதல் நாள் வசூல், முதல் வாரம் வசூல் என அனைத்து வசூலிலும் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஸ்வாசம்.

திருவிழா தினத்தில் வெளியான ரஜினி படங்களின் வசூலை, வேறு எந்த ஒரு நடிகரின் படமும் முந்தியதேயில்லை. இந்நிலையில், அஜீத்தின் விஸ்வாசம் படம் பொங்கல் நாளில் வெளியாகி, பேட்ட படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

பேட்ட, விஸ்வாசம் இந்த இரு படங்களும் பொங்கலுக்கு வெளிவந்து மெகா ஹிட் ஆகியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த இரு படங்களும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version