புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதன் காரணமாக இரு நாட்டிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
Discussion about this post