தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் நலனையே பார்க்க முடியாதவர், சிறுதயாரிப்பாளர்களின் நலனை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று நடிகர் விஷாலுக்கு எதிராக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் உதயா. இவர் தயாரித்து நடித்த படம் “உத்தரவு மகாராஜா”. கடந்த 16-ந் தேதி இந்த படம் வெளியானது. அதே தேதியில் விஜய் ஆன்டணி நடித்த “திமிரு புடிச்சவன்” என்ற படமும் வெளியானது.
சிறு தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்கள் வெளியாகும் தினத்தில் பெரிய படங்களை திரையிடக் கூடாது என்று விஷால் ஏற்கனவே கூறியிருந்தார். இதனை நினைவுபடுத்திய உதயா, “உத்தரவு மகாராஜா” படம் வெளியாகும் தினத்தில் “திமிரு புடிச்சவன்” படம் வெளியிடாமல் இருக்கும்படி விஷாலிடம் முறையிட்டார்.
ஆனால் அதனை விஷால் செவிமடுக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து உதயா மற்றும் சிலர் விலகினர்.
தயாரிப்பாளர் சங்கத்தில் தமக்கு ஆதரவு குறைவதை கண்டு பதறிப்போன விஷால் உடனடியாக விஜய் ஆண்டனிக்கு எதிராக ரெட் கார்டு உத்தரவு பிறப்பித்தார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனுமதி பெற்ற பிறகே படத்தை வெளியிட விதிமுறை இருக்கும் நிலையில், “திமிரு புடிச்சவன்” படக்குழுவினர் இந்த விதிமுறையை மீறி உள்ளனர். இதை அப்போதே, தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால், விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை கண்டு, பொறாமையில் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Discussion about this post