பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்களை பார்க்கலாம்.
97 புள்ளி எட்டு ஐந்து சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 97 புள்ளி ஏழு ஒன்பது சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97 புள்ளி ஐந்து ஒன்பது சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. 97 புள்ளி ஐந்து ஏழு சதவீதத்துடன் கோவை மாவட்டம் நான்காம் இடத்தையும், 97 புள்ளி மூன்று ஆறு சதவீத தேர்ச்சியுடன் தூத்துக்குடி மாவட்டம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ராணிப்பேட்டை மாவட்டம் 87 புள்ளி மூன்று சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.