விருதுநகர் அருகே தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள், மரங்களை சேதப்படுத்தியது குறித்து புகாரளித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ராஜபாளையம் அருகே நச்சாடைப்பேரி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா மற்றும் தென்னை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காட்டு யானைகள் 30க்கும் மேற்பட்ட மா, தென்னை மற்றும் பனைமரங்களை ஒடித்து சேதப்படுத்தின. இதனால், 3 லட்சம் வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், வனத்துறையிடம் புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.