கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சட்டசபையில் கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள வைத்தியலிங்க நர்சரி பிரைமரி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஐந்து வயது பெண் குழந்தை வயிற்று வலியால் துடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் விருதாச்சலத்தில் உள்ள தனியார் மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என்றும் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்து உள்ளார். இதை தொடர்ந்து அக்குழந்தை விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குழந்தை பரிசோதித்த அரசு மருத்துவர் குழந்தையை நிலை குறித்து விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து குழந்தையை விசாரித்த காவல்துறையினரிடம் அக்குழந்தை பள்ளியின் தாளாளரும் விருதாச்சலம் நகராட்சி 30-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினரின் புகைப்படத்தை சிறுமி அடையாளம் காட்டியதாகவும் அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணைக்காக நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுவரை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ஒரு அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் நேற்று இரவே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும் இதுவரை அவரை கைது செய்யாமல் வைத்திருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்புத் தீர்மானத்தினை சட்டபேரவையில் கொண்டுவந்தார். பாதிக்கப்பட்ட ஐந்து வயது குழந்தையை இன்னும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Discussion about this post