Its time to give it back மாமே! விராட் கோலி காட்டம்.. காம்பீர் ஓட்டம்! என்ன நடந்தது மைதானத்தில்?

மே ஒன்றாம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்  லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி லக்னோவை பந்துவீச பணித்தது. அதன்படி இரு அணி வீரர்களும் களம் புகுந்தனர். வழக்கம்போல் ஆர்சிபி அணியில் கேப்டன் பாஃப் டூ ப்ளெசிஸ்சும், விராட் கோலியும் ரன்கள் குவிக்கத் தொடங்கினர். 62 ரன்கள் பெங்களூர் அணியின் ஸ்கோர் இருந்த நிலையில் விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு சிறிது நேரம் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. அதற்கு பின் மைதானத்தின் சூழல் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைய ஆர்சிபி அணி திணற ஆரம்பித்தது. அதிகபட்சமாக டூ ப்ளெசிஸ் 44, கோலி 31, தினேஷ் கார்த்திக் 12 எடுத்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கோலி ரிவெஞ்ச்!

கடந்த முறை இந்த இரு அணியும் சந்தித்த போது கடைசி பந்துவரை ஆட்டம் நீண்டது. பைசில் ரன் எடுத்து ஆவேஸ் கான் ஆவேசமாக கத்தி வெற்றியைக் கொண்டாடினார். கவுதம் காம்பீரோ ஆர்சிபி அணியைப் பார்த்து வாயில் விரல் வைத்து மூச் எனும் தொணியில் வம்பிழுத்தார். இட்ஸ் டைம் டூ கிவ் இட் பேக் எனும் விதிப்படி இரண்டாவது இன்னிங்சை விளையாடிய லக்னோ வீரர்கள் பரிதாப நிலைக்குதான் சென்றார்கள். ஒவ்வொரு விக்கெட்டையும் அவர்கள் இழக்கும்போது விராட் கோலி தனக்கே உரிய பாணியில் செலிபிரேசன் செய்தார். காம்பீர் வாயில் விரல் வைத்து மூச் என்று முந்தைய மேட்சியில் சொன்னதற்கு பதிலடியாய் கோலி வாயில் விரல் வைத்து எடுத்து விட்டு இதயத்தில் கைவைத்து ரசிகர்களுக்கு அன்பை செலுத்தினார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கினர். லக்னோ வீரர்களோ செய்வதறியாது புலம்பினர். இன்னொரு பக்கம் ஆர்சிபியின் பந்துவீச்சோ படு தீவிரமாக இருந்தது. வந்தவர்களையெல்லாம் பெவிலியனுக்கு அனுப்பி விட்டார்கள். அதிகபட்சமாக ஹேசில்வுட் 2, கர்ண் சர்மா 2, மேக்ஸ்வெல், சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் போன்றோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

கோலி vs காம்பீர்

ஆட்டம் முடிந்து கைகுலிக்கி செல்கையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லக்னோ வீரர் நவீன் உல் ஹக் கோலியிடம் எதோ பேசியபடி கையைத் தட்டிவிட்டார். அதற்கு முன்பு கைல் மேயர்சிடம் பேசியபடி இருந்த கோலி அருகே வந்த காம்பீர் மேயர்சை கையைப் பிடித்து இழுத்துச்சென்றார். அது பார்ப்பதற்கு இவன் கூட சேராத என்று சொல்வதுபோல இருந்தது. நவீன் உல் ஹக் கோலியின் கையைத் தட்டிவிட்டதும்தான் கோலி பொறுமை இழந்தார். உடனே மறுபக்கம் காம்பீர் கத்த தொடங்கிவிட்டார். பின்னர் கோலி பொறுமையாக வந்து விளக்கம் கொடுத்துவிட்டு போய்விட்டார். கவுதம் காம்பீர் செய்வதறியாது தனியாக புலம்பியபடி சென்றுவிட்டார். இச்சம்பவத்தினை நெட்டிசன்கள் கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடினர்.

Exit mobile version