ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசையின் படி, பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 14 புள்ளிகள் உயர்ந்து, 934 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து வீரர் கானே வில்லியம்ஸன் 915 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 11 இடங்கள் முன்னேறி 48-வது இடத்திலும், துணைக் கேப்டன் ரஹானே 2 இடங்கள் உயர்ந்து, 15-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 28-வது இடத்திற்கும், முகமது ஷமி 24-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

Exit mobile version