திருப்பதி கோயிலில் விஐபி தரிசன முறை விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது.
திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக, கட்டணம் இல்லாத தர்ம தரிசன வரிசை உள்ளது. இதில் பல மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசிக்க முடியும். இது தவிர, கட்டண தரிசனம், வி.ஐ.பி., தரிசனம் போன்ற தரிசன முறைகளும் உள்ளன. இதனால், வரிசைகளில் காத்திருப்போர், ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை எதிர்த்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுப்பா ரெட்டி, வி.ஐ.பி., தரிசன முறையை ரத்து செய்ய முன்வந்துள்ளார். இரண்டொரு வாரங்களில், தேவஸ்தான நிர்வாகக்குழு கூட்டம் கூட உள்ளது. அதில், இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post