சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில், வினீத் கோத்தாரிக்கு தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, உச்ச நீதிமன்றத்துக்கு 3 தலைமை நீதிபதிகளை தந்த சிறப்பு வாய்ந்தது சென்னை உயர் நீதிமன்றம் என்று பாராட்டு தெரிவித்தார்.
வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதிய நீதிபதியாக கோத்தாரி பதவியேற்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.