1853 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ல் ஹாலந்தில் பிறந்த வின்சண்ட் வான்கா பை போலார் டிசாடர் நோயினால் பாதிக்கப்பட்டவர். இன்று அவரது பிறந்த நாள். கூடவே உலக பை போலார் டிசாடர் தினமும் இன்று தான்.
யார் இந்த வான்கா?
வான்கா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சாதாரண இளைஞர். முன்னர் குறிப்பிட்டது போல அவர் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர். சிறிய வயதில் இருந்தே அவருக்கு பெற்றோர்களின் அரவணைப்பும் அன்பும் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால் பெரும்பொழுதுகளை அவர் தனிமையில் தான் கழித்தார். இதனால் அவருக்கு இயல்பிலேயே தாழ்வுமனப்பான்மை, பதட்டம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்றவை இயல்பாகவே இருந்து வந்தது. இதுதான் பை போலார் டிசாடர் என்பது அவருக்கு தெரியவே தாமதம் ஆகியுள்ளது. சொல்லப்போனால் உலகின் முதல் பை போலோர் டிசாடர் நோயாளி இவர்தான்.
தன்னுடைய 27 வயதில் ஓவியங்களை வரைய ஆரம்பித்த வான்கா தோல்வி, காதல் நிராகரிப்பு, வலி, மனவேதனை போன்றவற்றையும் தனிமையின் உள் அடுக்குகளின் உட்கூறுகளையும் பிரதிபலிக்கும் விதமாக பல ஓவியங்களைத் தீட்டினார். அவர் ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்திருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் விற்றுத் தீர்ந்த ஓவியம் ஒன்றே ஒன்றுதான். அவரது பை போலார் டிசாடர் நோய்க்கூறின் வீரியமே அவரை இதுபோல வரையத் தூண்டியிருக்கிறது என்று சில நிபுணர்கள் கூறிவருகிறார்கள்.
காதை அறுத்துக் கொடுத்தாரா?
வான்கா ஒரு பாலியல் தொழிலாளிக்கு காதை அறுத்துக் கொடுத்தார் என்று ஒரு உலகளாவிய செய்தி ஒன்று உள்ளது. அது உண்மை தான் என்று சமீபத்தில் நிரூபணம் ஆகியுள்ளது. அந்தப் பெண்மணியின் பெயர் கேப்ரியல். அவரின் மீது கொண்ட பிரியத்தால் அந்தக் காதை அவர் அறுத்துக் கொடுக்கவில்லை. பை போலார் டிசாடர் நோயினால் தான் அந்தக் காதை அருகிருந்த அப்பெண்மணிக்கு கொடுத்துவிட்டாராம். ஆனால் பிற்காலத்தில் அந்தக் காதுக்கு புனிதத் தன்மையைப் புகுத்தி நாம் போற்றி வருகிறோம். பை போலார் டிசாடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரோ பேசுவது போல கேட்டுக்கொண்டிருக்கும். அந்த அசரீரியின் குரலைக் கேட்க முடியாமல் அவர் திணறியுள்ளார். அதனால் காதை அறுத்து அவர் தங்கியிருந்த விடுதியில் பணிப்பெண்ணாக இருந்த கேப்ரியலிடம் அக்காதினைக் கொடுத்தார். இதனை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். 1890 ஆம் ஆண்டு நோய் முற்றிய நிலையில் தன்னுடைய 37வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.