நான் ரெடி… நீங்க ரெடியா? விதவிதமாய் வித்தியாசமாய்… பல வண்ணங்களில்!!

விநாயகர் சதுர்த்திக்காக புதுச்சேரி அருகே விதவிதமான வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

நாடு முழுவதும் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், கொண்டாட்டத்துக்கு நாங்களும் தயார் என விநாயகர் சிலைகளும் தயாராகி வருகின்றன. புதுச்சேரியை ஓட்டியுள்ள தமிழக பகுதியான பட்டானூரிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சிலைகளை உருவாக்கி இறுதிவடிவம் கொடுத்து வருகிறார் கைவினைக் கலைஞர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான மூலப்பொருட்களைக் கொண்டும், நீர் வண்ணங்களை பயன்படுத்தியும் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்த சிலைகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பல்வேறு வகைகளிலும், 5 முதல் பல்வேறு அடி உயரத்திலும் இங்கு விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

நீர்வண்ணத்தை பயன்படுத்துவதால் விநாயகரை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யும்போது எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார், 25 ஆண்டாக விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர் குமார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 2000 சிலைகள் ஆர்டர் கிடைந்துள்ளதாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழாக்கள் என்பவை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவை… விழாவுக்காக விநாயகர் சிலைகளும், விநாயகருக்காக விழாவும் தயாராக உள்ளன.

Exit mobile version