திமுக ஆட்சியில் சிமெண்ட், கம்பி, ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வது வழக்கம்தான்-115 ரூபாய் விலையேற்றம்!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த குருமா அம்மாபேட்டை பகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக மரக்காணம் கிழக்கு மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் சிமெண்ட், கம்பி மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை ஏறும் என விமர்சித்தார்.

முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையால் அதிமுக ஆட்சியின் போது சிமெண்ட் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதம் தெரிவித்தார்.

 

மேற்கண்ட செய்தியை பேட்டியுடன் கூடிய கூடுதல் தகவல்களுடன்  தெரிந்துகொள்ள..

↕↕↕↕↕↕

Exit mobile version