அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை மீட்கும் முயற்சியாக அவற்றுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர் திண்டுக்கல் கிராம மக்கள்.
பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவருவதாக கூறப்படும்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் சிட்டுக்குருவிகளை பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர். வீட்டு வாசலில் தவறாது உணவளிக்கின்றனர். மேலும் அவைகள் தங்குவதற்கு மூங்கில் கழியால் துளைகள் இட்டும் பாதுகாத்து வருகின்றார். இங்குள்ள பலரது வீடுகளில் சிட்டுகுருவிகள் கூடுகளும் கட்டியுள்ளது. சிட்டுக்குருவிகள் இடும் சத்தம் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர் கிராம மக்கள். சிட்டுக்குருவி இனத்தை பாதுகாத்து வரும் கரிசல்பட்டி கிராம மக்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Discussion about this post