வவ்வால்களுக்காக பட்டாசுகளை தவிர்க்கும் கிராம மக்கள்

குடியாத்தம் அருகே வவ்வால்களை தெய்வமாக மதிக்கும் கிராம மக்கள், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, செண்டத்தூர் கிராமத்தில், சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் தங்கி வருகின்றன. மரத்தில் தஞ்சம் அடைந்துள்ள வவ்வால்களை, அக்கிராம மக்கள் தெய்வமாக மதித்து வருகின்றனர். இதனால், செண்டத்தூர் கிராமத்திற்குள், தீபாவளி போன்ற பண்டிகை காலத்திலும், கிராம விழாவின் போதும், மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. வவ்வால்களுக்காக பட்டாசுகளை தவிர்த்து வரும் கிராம மக்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version