விஜயராஜே சிந்தியா நினைவு – 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் 100வது பிறந்த தினத்தையொட்டி 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. நிதியமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், காணொலி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர், முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் கொண்டுவந்ததன் மூலம், பெண்களின் முன்னேற்றம் குறித்த விஜயராஜே சிந்தியாவின் எண்ணத்தை அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார்.

Exit mobile version