ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்ததால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அனைவரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், துணை முதலமைச்சரை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறீர்களே, அவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்தவர் என்பதால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும், அவர், பார்வையாளராகவோ, அல்லது மாடுபிடி வீரராகவோ வரலாம் என்று கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.