போதைப்பொருளை ஊக்குவிக்கும் விஜயின் “லியோ” திரைப்படப் பாடல்! காவல்நிலையத்தில் புகார்!

நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் பாடல் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையில் இருப்பதாகவும் ரவுடிசத்தில் தள்ளும் வகையில் இருப்பதாகவும் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார்.

Leo- Na ready dhan varava lyric |thalapathy vijay | lokesh kanagaraj |  aniruth ravichandran - YouTube

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர் டி ஐ செல்வம் என்பவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கின்ற லியோ திரைப்படத்தின் “நான் ரெடியா” பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் இன்று 10 மணி அளவில் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார் ஆகவே நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை கைடு செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இப்பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version