1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் தாதாசாகேப் பால்கே விருது சினிமாத்துறையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விருதாகும். இந்த விருது தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் தமிழ் நடிகர் ரஜினிகாந்த் தான்.
ரஜினிக்கு முன்னதாக தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்கள்:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (1996):
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் என்பது மட்டுமன்றி நடிப்பு என்ற சொல்லுக்கு குறியீடாகவும் மாறிப்போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது சினிமாத்துறைப் பங்களிப்பை பாராட்டும் விதமாக 1996ஆம் ஆண்டு இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் (2010):
1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் திரைப்படம். அதன்பிறகான தன் சினிமாப் பயணங்களில் தொடர்ந்து எளிய மனிதர்களின் குடும்ப உறவுகளின் சிக்கல்களை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டும் கலைப்படைப்புகள் இவரது பிரதான படைப்புகளாக இருந்தன. அதே சமயம் தண்ணீர் தண்ணீர் போன்ற அரசியல் படைப்புகள் இன்னும் உயிர்ப்போடு இருப்பதும் தனிச்சிறப்பு. மேலும், ரஜினி கமல் என்ற இருபெரும் கலை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. இவரது சினிமாத்துறை பங்களிப்பை போற்றும் விதமாக 2010ஆம் ஆண்டு இவருக்கு தாதாசகேப் பால்கே விருது வழங்கப்பட்ட்டது.
இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு பிரதமர், முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post