மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும் மருத்துவர்கள்! திருவாரூர் கால்நடை மருத்துவமனையின் மோசமான நிலை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு கால்நடை மருத்துவமனையை விடியா திமுக மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவாஞ்சியத்தில் செயல்படும் அரசு கால்நடை மருத்துவமனை மிகவும் பழுதடைந்து சுகாதாரமற்ற முறையில் காட்சியளிப்பதுடன், தரையும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிதறி கிடக்கின்றன. தற்போது வரை மின்சார வசதி இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனைக்கு கால்நடை மருத்துவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் வருவதாக கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டியுள்ளனர். விடியா அரசு அரசு கால்நடை மருத்துவமனையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

Exit mobile version