கலை, இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் என அனைத்து வகையிலும் தனி சிறப்பு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, இந்தியாவின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் சுகாதார வளர்ச்சி அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டார். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோக்கி செல்லும் மாநிலமாக திகழ்வதாகவும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய அளவில் மருத்துவத்தில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் திகழ்வதாக குறிப்பிட்டார்.
Discussion about this post