சென்னை ராயபேட்டையில் உள்ள நாரத கான சபாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர், அனைத்து மதங்களும் மகத்தானவை என்றும், முன்பு இருந்தே மதசார்பின்மை இருப்பதாகவும், அதற்கு பின் தான் அரசியல் அமைப்பு சட்டம் வந்தது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வெங்கையா நாயுடு, தாய் மொழி கல்வி அத்தியாவசிமானது எனவும், மத்திய, மாநில அரசு தாய் மொழிக் கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.