புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் , சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆளும் விடியா அரசு அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த விவாகரம் தொடர்பாக வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பின் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நான்கு மாதங்களாக விசாரணை நடத்தியதில் 147 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்தும் இதுவரையும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்தது அரசு உள்நோக்கத்தோடு மறைப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. உடனே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திடீர் திருப்பமாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். 11 பேர் மீது சந்தேகம் உள்ளதாக கூறி, அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் காவலர் முரளி ராஜா உள்ளிட்ட வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் என மூன்று பேர் மட்டும் டிஎன்ஏ சோதனைக்கு வந்தனர். வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த மற்ற எட்டு பேர் இந்த டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆஜராகவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மறுபடியும் சம்மன் அனுப்பபோவதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடிநீர் தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகளில் இரண்டு ஆண்கள், மற்றும் ஒரு பெண்ணின் கழிவும் கலந்திருந்ததை கண்டறிந்ததாக கூறப்பட்டது. ஆளும் விடியா அரசு திட்டமிட்டே இதில் உண்மையை மறைப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
– செய்தியாளர் ராஜேஸ் மற்றும் பாலா துரைசாமி
Discussion about this post