வேல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் வேல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வருமான வரித்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post