வேலூர் தேர்தல் -பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை

வேலூர் மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை அளிக்க 1800 425 6669 என்ற இலவச எண்ணும், வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள 9445467707 என்ற எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் itcontrol.chn@gov.in என்ற இணையதள முகவரியிலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.

Exit mobile version