எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் கொல்லம், ராஜபாளையம் மற்றும் தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி வரை செல்கிறது. இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே நிலையத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ரயில்வே பொது மேலாளரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, விரைவு ரயில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினருக்கும் இரயில்வே துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post