மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதியும் கேரளாவில் ஏப்ரல் 23 ஆம் தேதியும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
Discussion about this post